Skip to content

2023-ல் 520 டி எம் சி மழை நீர் வீணாக கடலில் சேர்ந்தது.. அன்புமணி ராமதாஸ்

  • by Authour

2023-ல் 520 டி எம் சி மழை நீர் வீணாக சென்று கடலில் கடந்தது என்று அன்புமணி ராமதாஸ்  தெரிவித்தார்.  திருச்சி கொள்ளிடம் ஆற்றில் விவசாயிகள் இன்று கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாமக  தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது.. இந்த ஆண்டும் அதேபோல பல நூறு டிஎம்சி தண்ணீர் வீணாக சென்று கடலில் கலக்கும் சூழல்தான் உள்ளது காரணம் தமிழ்நாட்டில் மழை நீரை சேமிக்க உரிய கட்டமைப்பு இல்லை. என்னை பொருத்தவரையில் தமிழ்நாடு பட்ஜெட் நீர் பாசன திட்டத்திலிருந்து தான் தமிழ்நாடு பட்ஜெட்டை

தொடங்க வேண்டும். நீர்ப்பாசன திட்டத்திற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்தால் தான் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியும்.

தமிழ்நாட்டில் 63 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பி இருக்கிறார்கள் அவ்வளவு மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்ன தேவை உள்ளது என்பது தமிழக அரசுக்கு தெரியவில்லை.

விவசாயிகளுக்கு தேவையான நீரை கொடுக்க வேண்டும் மண்ணை பாதுகாக்க வேண்டும் விவசாயிகளின் விளைச்சலுக்கு மரியாதை கொடுத்து அவர்களுக்கு விளைச்சலுக்கு உரிய விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

error: Content is protected !!