Skip to content
Home » 27 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர் .. முழுவிபரம்..

27 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர் .. முழுவிபரம்..

தமிழக உள்துறை செயலாளர் பி.அமுதா பிறப்பித்துள்ள உத்தரவில், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரி பிரஜ் கிஷோர் ரவி நியமிக்கப்படுகிறார். குடிமைப் பொருள் வழங்கல் சிஐடி பிரிவு டிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரி வன்னியபெருமாள் நியமிக்கப்படுகிறார். சென்னை காவலர் பயிற்சிக் கல்லூரி டிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரி ராஜீவ்குமார் நியமிக்கப்படுகிறார்.  பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரி பால நாக தேவி நியமிக்கப்படுகிறார். மாநில குற்ற ஆவணக் காப்பக கூடுதல் டிஜிபியாக அபின் தினேஷ் மோடக் நியமிக்கப்படுகிறார். காவல்துறை நிர்வாகப் பிரிவு ஏடிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரி வினித் தேவ் வான்கடே நியமிக்கப்படுகிறார். திருச்சி காவல் ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி காமினி நியமிக்கப்படுகிறார். திருச்சி காவல் ஆணையராக இருந்த சத்யப்பிரியா சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்படுகிறார். வடக்கு மண்டல இணை ஆணையராக இருந்த ரம்யா பாரதி மதுரை டிஐஜியாக நியமிக்கப்படுகிறார் புதிய வடக்கு மண்டல இணை ஆணையராக தலைமையிட இணை ஆணையர் சாமுண்டேஸ்வரி ஐபிஎஸ் நியமிக்கப்படுகிறார்  தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக நியமிக்கப்படுகிறார். பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் சென்னை தலைமையிட ஐஜியாக நியமிக்கப்படுகிறார். சென்னை தலைமையிட கூடுதல் ஆணையர் லோகநாதன் மதுரை காவல் ஆணையராக நியமிக்கப்படுகிறார். கோவை ஐஜி சுதாகர் சென்னை போக்குவரத்து காவல் ஆணையராக நியமிக்கப்படுகிறார். மதுரை காவல் ஆணையர் நரேந்திரன் நாயர், தென் மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவு ஐஜி சந்தோஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு மண்டல ஐஜியாக புவனீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜியாக இருந்த பகலவன் திருச்சி சரக டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி சரக டிஜிபியாக இருந்த சரவண சுந்தர் கோவை சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை மாநகர காவல்துறை ஆணையராக இருந்த ராஜேந்திரன், சிஐடி நுண்ணறிவு பிரிவு டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையாக இருந்த கபில்குமார் சரத்கர் சென்னை காவல் ஆணையராக தலைமையக ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி அபின் தினேஷ் மொடாக், மாநில குற்ற ஆவண காப்பக கூடுதல் டிஜிபியாக அபின் தினேஷ் மோடக் நியமிக்கப்பட்டுள்ளார்.  மதுரை சரக டிஐஜியாக இருந்த பொன்னி காஞ்சிபுரம் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!