Skip to content

ஜெ.வின் பிறந்த நாள்… பாபநாசத்தில் அமமுக சார்பில் மரியாதை…

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு அ.ம.மு.க சார்பில் ஜெய லலிதா படத்திற்கு மாலையணிவித்து, பூக்களைத் தூவி மரியாதைச் செலுத்தப் பட்டது. தஞ்சை மாவட்டம், பாபநாசம் புதிய பேருந்து நிலையம் அருகில் வைக்கப் பட்டிருந்த ஜெயலலிதா படத்திற்கு மாவட்டச் செயலர் ரெங்கசாமி தலைமையில் மாலையணிவித்து மரியாதைச் செலுத்தப் பட்டது. இதில் பேரூர் செயலர்கள் பாபநாசம் பிரேம்நாத் பைரன், அய்யம் பேட்டை சிட்டி பாபு, ஒன்றியச் செயலர்கள் பாபநாசம் தெற்கு பன்னீர் செல்வம், வடக்கு மகேந்திரன், மாவட்ட அவைத் தலைவர் ஜெயராமன், பொதுக் குழு திவாகரன், சார்பு அணி நிர்வாகிகள் ஆனந்தி, அன்பழகன், பிரகதீஸ்வரி, சரவணபாபு, ஆனந்தம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!