வக்கீலுக்கு அரிவாள் வெட்டு சம்பவம்.. வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்சி வரகனேரி பகுதியை சேர்ந்த அழகேசன்மற்றும் அவரது சகோதர் உமா சங்கர். இவர்கள்ப2 பேரும்கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவுடி கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்டனர். இந்த சம்பவத்தில் உமா சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அழகேசன் படுக்காயத்துடன் திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். படுகாயம் அடைந்த அழகேசன் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தாக்கி கொலை செய்ய முயற்சித்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு அளிக்க பட்டியல்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டு நடவடிக்கை குழு பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார் ஆர்ப்பாட்டத்தில் திருச்சிராப்பள்ளி செயலாளர் சி முத்துமாரி வரவேற்றார்.
இதில் பார் கவுன்சில் உறுப்பினர் ராஜேந்திர குமார் துணைத்தலைவர் வடிவேல் சாமி மற்றும் குற்றவியல் வக்கீல்கள் சங்க தலைவர் முல்லைசுரேஷ், துணை தலைவர்கள் வரகனேரி சசிகுமார் பிரபு பொருளாளர் கிஷோர் குமார், முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன், செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீதேவி, சித்ரா எழிலரசி மற்றும் ஆனந்த் உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்புஅளிக்க வேண்டும்.வழக்கறிஞர் அழகேசன் மீது தாக்குதல் நடத்தியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்று பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள்.
வாலிபரை தாக்கி டூவீலர் திருட்டு
திருச்சி கருமண்டபம் சமத்துவ நகரை சேர்ந்தவர் சுகுமார் (வயது 39) இவர் தீபாவளி அன்று திருச்சி ரெயில்வே ஜங்ஷன் பகுதியில் உள்ள ஒரு அரசு மதுபான கடையில் மது வாங்கி குடித்துக் விட்டு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது ரெயில்வே ஜங்ஷன் எதிரில் அவரை வழிமறித்த மர்ம ஆசாமி ஒருவர் சுகுமாரை தாக்கி அவர் சட்டை பாக்கெட்டில் இருந்த ரூபாய் 500 பணத்தை திருடிக் கொண்டு சுகுமாரை கீழே தள்ளிவிட்டு அவருடைய இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டார். இது குறித்து சுகுமார் கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்ம ஆசாமியை வலை வீசி தேடி வருகின்றார். இந்நிலையில் திருட்டுப் போன இருசக்கர வாகனம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் கரூர் பைபாஸ் சாலை பகுதியில் அனாதையாக நிறுத்தி வைக்கப்பட்டத்தை கண்டுபிடித்து போலீசார் அங்கு சென்று இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபரை வலைவிசி தேடி வருகின்றனர்.
சுமை தூக்கும் தொழிலாளிக்கு கத்திக்குத்து.. வாலிபர் கைது
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (32). இவர் சுமை தூக்கும் தொழிலாளி.
இந்நிலையில் நேற்று முன் தினம் மணிகண்டன் இபி ரோடு பகுதியில் தட்டு ரிக்ஷாவில் அமர்ந்து மது குடித்துக்கொண்டே இருந்தார். அப்பொழுது அங்கு வந்த கருணாகரன் என்பவர் குடிபோதையில் அங்கு வந்து மணிகண்டன் யிடம் தகராறு செய்து அவரை தாக்கி விடுகிறார்.பிறகு வடக்கு தாராநல்லூர்ரை சேர்ந்த தனது சகோதரர் மற்றொரு மணிகண்டன் (25) என்பவர்ரை செல் போனில் அழைத்து விஷயத்தை கூறினார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் நேரில் வந்து சுமை தூக்கும் தொழிலாளி மணிகண்டனை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து ஓடி விட்டார். இந்த சம்பவத்தில் காயமடைந்த சுமை தூக்கும் தொழிலாளி மணிகண்டன் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.