சென்னை ஓட்டேரியை சேர்ந்த ஒருவர் தனது மனைவியுடன் இன்று பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பைக்கை பின் தொடர்ந்து ஒருவர் வந்தார். அவர் பைக்கின் பின்னால் இருந்த பெண்ணிடம் வம்பு செய்யும் நோக்கில் தொடர்ந்து ஹாரன் ஒலி எழுப்பியபடி, பைக்கை மோதுவது போல சென்றார்.
பைக்கை நெருங்கியதும் அந்த பெண்ணுக்கு முத்தம் கொடுப்பது போல சமிக்ஞை செய்தார். இது குறித்து அந்த பெண் தனது கணவரிடம் தெரிவித்தார். இதனால் அவர் பைக்கை நிறுத்தி பின்னால் தெடர்ந்து வந்த வாலிபரை கண்டித்தார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
பின்னர் அந்த வாலிபரை ஓட்டேரி போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அவர் ஓட்டேரி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக இருப்பது அப்போது தான் தெரியவந்தது. அவரது பெயர் தினேஷ். ஓட்டேரி எஸ்.ஐ. , போலீஸ்காரர் தினேஷிடம் விசாரணை நடத்தி வருகிறார்.