புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் நேற்று ஒரு கோவில் திருவிழா நடந்து கொண்டிருந்தது. அப்போது பெட்ரோல் போடும் பங்கில் இரு இளைஞர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் இரு சமூகத்தை சோ்ந்தவர்கள் என்பதால் மோதல் முற்றியது. இதில் 2 டூவீலர்கள். ஒரு குடிசை வீடு அடித்து நொறுக்கி தீவைக்கப்பட்டன.
அப்போது ஒரு தரப்பினர் அந்த வழியாக வந்த அரசு பஸ்களையும் கல்வீசி தாக்கி சேதப்படுத்தினா. இதனால் வடகாடு செல்லும் பஸ்கள அனைத்தும் நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்ததும் எஸ்.பி. அபிஷேக் குப்தா மற்றும் ஆயுதப்படை போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். திருச்சி டிஐஜி வருண்குமாரும் வடகாடு சென்று நிலவரத்தை ஆய்வு செய்தார்.
சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும் வடகாடு சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறினார். இந்த சம்பவம் குறித்து தாசில்தார் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.