சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார், மானாமதுரை டிஎஸ்பியின் தனிப்படை போலீசார் விசாரணையில் தான் உயிரிழந்தார். இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் அங்கீகரிக்கப்படாத சிறப்பு தனிப்படைகளை கலைத்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
வழக்கமாக அனைத்து மாவட்டங்களிலும் எஸ்.பி, டிஎஸ்பி க்கள் தலைமையில் தனிப்படைகள் இயங்கும். இவர்கள் அந்த மாவட்டத்தில் எங்கு திருட்டு சம்பவங்கள் நடந்தாலும் அங்கு சென்று துப்புதுலக்குவார்கள்.
இப்படி அஜித்குமாரிடம் விசாரித்தபோது தான் அவர் உயிரிழந்தார். எனவே அங்கீகரிக்கப்படாத சிறப்பு தனிப்படைகளை கலைத்த டிஜிபி, இனி தேவை ஏற்பட்டால் அதற்கு ஏற்ப அப்போது தனிப்படைகள் அதை்துக்கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டுள்ளார்.