Skip to content

சைக்கிள் கேட்டு மாணவி கோரிக்கை….நிறைவேற்றிய கலெக்டர்..

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் M.கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த காந்திமதி என்பவர் கூலி வேலை செய்து வருகிறார்.இந்த நிலை உடல்நிலை சரியில்லாமல் அவரது கணவர் குமரவேல் இறந்துள்ளார்.

இதனை தொடர்ந்து காந்திமதியின் மகள் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளி ஐந்தாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு தற்போது ஆறாம் வகுப்பு செல்கிறார். கடந்த புதன்கிழமை மிட்டூர் பகுதியில் நடைபெற்ற உங்களை தேடி உங்கள் ஊரின் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது தந்தையை இழந்த அரசு பள்ளி மாணவி லாவண்யா என்பவர் மேடம் நான் ஆறாம் வகுப்பு படிக்க செல்கிறேன் 6 கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டும் எனவே சைக்கிள் கொடுத்த பள்ளிக்கூடம் சென்றுவர நன்றாக இருக்கும் என மனு அளித்துள்ளார்

மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் பொது நிதியிலிருந்து இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் அரசு பள்ளி மாணவி லாவண்யாவுக்கு மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி சைக்கிளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!