Skip to content

செப்.9ல் துணை ஜனாதிபதி தேர்தல் : வரும் 7ம் தேதி வேட்புமனு தாக்கல்

இந்திய துணை ஜனாதிபதியாக இருந்த  ஜெகதீப் தன்கர், திடீரென பதவியை ராஜினாமா  செய்தார். அவர் உடல்நலத்தை காரணம் காட்டி ராஜினாமா செய்வதாக அறிவித்த போதிலும், அவருக்கு பாஜக மேலிடம் கொடுத்த நெருக்கடி காரணமாகவே அவர் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்  அடுத்த  துணை ஜனாதிபதியை  தேர்ந்தேடுக்க தேர்தல்  நடத்துவதற்கான நடவடிக்கைகளை ஏற்கனவே தேர்தல் ஆணையம் தொடங்கி விட்டது.  இப்போது தேர்தல் தேதியை ஆணையம் அறிவித்து உள்ளது. அதன்படி  வரும் செப்டம்பர் மாம் 9ம் தேதி தேர்தல் நடக்கிறது.  போட்டி இருந்தால், அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.  அன்றே வாக்குகள் எண்ணப்பட்டு  முடிவுகள் அறிவிக்கப்படும்.

இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 7ம் தேதி தொடங்கி  21ம் தேதி வரை நடைபெறும். ஆகஸ்ட் 25ம் தேதி வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாள்.

 

error: Content is protected !!