சுதந்திரப் போராட்டத் தியாகியும், கொடி காத்த குமரன் என போற்றப்படும் திருப்பூர் குமரனின் 94-ஆவது நினைவு நாளை முன்னிட்டு,
கரூர் மாவட்ட திமுக கலைஞர் அறிவாலயம் வளாகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த திருப்பூர் குமரனின் திருவுருவப் படத்திற்கு, திமுக மாவட்ட செயலாளரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திருப்பூர் குமரனின் திருவுருவப் படத்திற்கும், கொட்டும் மழையிலும் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, சுதந்திரப் போராட்ட வீரரின் தியாகத்தை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தினர்.

