புதன்கிழமை அன்று, ஒரு அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாயின் மதிப்பு 90 ரூபாயைத் தாண்டியது. இது இந்திய நாணயத்திற்கு ஒரு புதிய குறைந்தபட்ச நிலை. இந்த ஆண்டு முழுவதும் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.
Emerging Markets கரன்சிகள் (Chinese Yuan, Brazin Real, Mexican Peso, Thai Baht, Malaysian Ringgit) அனைத்தும் வலுவாக ஆகி வரும் நிலையில், இந்தியாவின் ரூபாய் மட்டும் வலுவிழந்து வருகிறது குறிப்பிடத்தக்கது..இந்த ஆண்டு (டிசம்பர் 2 வரை) ரூபாயின் மதிப்பு 5.5% குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணங்கள்:
- வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து பணத்தை திரும்ப எடுத்துச் செல்வது
- இந்தியாவின் மிகப்பெரிய ஒரு கம்பெனிக்கு ஆதரவாக ரஷ்யாவில் இருந்து குருடு ஆயில் இறக்குமதி செய்ததால் அமெரிக்கா இந்தியா மீது கூடுதல் வரிகளை விதித்த பிறகு, ஆகஸ்ட் மாதத்தில் ரூபாயின் மதிப்பு 1.64% குறைந்தது. செப்டம்பர் மாதத்தில் ரிசர்வ் வங்கி தலையிட்டதால், வீழ்ச்சி விகிதம் 0.85% ஆகக் குறைந்தது. நவம்பர் மாதத்தில் 0.5% மதிப்பு குறைந்தது.
- வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பு: இந்தியா அதிகமாக இறக்குமதி செய்கிறது, ஆனால் ஏற்றுமதி குறைந்துள்ளது. இதனால் டாலருக்கான தேவை அதிகரித்து, ரூபாயின் மதிப்பு குறைகிறது.
- இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விரைவில் வரவில்லை என்றால், ரூபாய் மேலும் பலவீனமடையலாம்
டாலர் மட்டுமல்ல, யூரோ, பவுண்ட், யென் போன்ற மற்ற நாணயங்களுக்கு எதிராகவும் ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளது….. இனிய பிறந்தநாள் அனைத்து பொருட்களின் விலைவாசியின் உயர்ந்து மக்களின் வாங்கும் திறன் பாதிக்கும்.

