Skip to content

உலக சாதனை… 50 அடி உயரத்தில் யோகா… 12 வயது சிறுவன் அசத்தல்

  • by Authour

கோவையில் 50 அடி உயரத்தில் உபவிஸ்த கோணாசனத்தில் ஐந்து நிமிடங்கள் 27 விநாடிகள் தொடர்ந்து செய்து , 12 வயது சிறுவன் உலக சாதனையில் இடம் பிடித்துள்ளார். கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த ரூபிகா என்பவரது மகன் புவேஷ் 12 வயதான இவர் ஏழாம் வகுப்பு பயின்று வருகிறார். சிறு வயது முதலே யோகாவில் இரண்டு கின்னஸ் சாதனை உட்பட ஏராளமான கோப்பைகள், விருதுகள், சான்றிதழ்கள் குவித்து வைத்துள்ள சிறுவன் புவேஷ், தற்போது 50 அடி உயரத்தில் யோகாவில் புதிய உலக சாதனை செய்துள்ளார்.

அதன் படி சிறுவன் புவேஷ் கிரேனின் உதவியுடன் ஐம்பது அடி உயரத்தில் தொங்கியபடி உபவிஷ்த கோணாசனம் எனும் ஆசனத்தில்

தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் 27 விநாடிகள் தொங்கியபடி நின்றார். திக் திக் நிமிடங்களாக பார்வையாளர்களின் உச்ச டென்ஷனில் ஐம்பது அடி உயரத்தி் தொங்கிய சிறுவன் சாதரணமாக தனது சாதனையை செய்த்தோடு கூலாக கிரேனில் இருந்து இறங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

இவரது இந்த சாதனையை அங்கிகரித்த ரஷ்ய நாட்டை சேர்ந்த யூனியன் உலக சாதனை புத்தகத்தின் மேலாளர் அலைஸ் ரேய்னாட் சிறுவன் பூபேஸை பாராட்டி வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் யூனியன் உலக சாதனை பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.

50 அடி உயரத்தில் கைகளை மட்டுமே பேலன்ஸ் செய்து கிரேனில் தொங்கியபடி யோகா செய்த சிறுவனின் சாதனையை அவரது பள்ளியில் பயலும் சக மாணவர்கள் ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலரும் உச்ச டென்ஷனோடு பார்த்தபடி கைகளை தட்டி உற்சாகபடுத்தினர்.

error: Content is protected !!