திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கோடியூர் பகுதியைச் சேர்ந்த பாபு மகள் அஸ்வினி (20) இவர் ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த திருமணமான சதீஷ்குமார் என்ற நபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சதீஷ்குமாரும் தனக்கு திருமணமான தகவலை காதலியிடம் கூறவில்லை. காதல் முற்றிய நிலையில் அஸ்வினி தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி சதீஷ்குமாரிடம் கூறி உள்ளார்.
அப்போது சதீஷ்குமார், எனக்கு திருமணம் செய்து கொள்ள ஆசை தான். ஆனால் என் மனைவி இதற்கு ஒத்துக்கொள்ளமாட்டாள் என கூறி இருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த அஸ்வினி, தனது வாழ்க்கை வீணாகிவிட்டதே என்ற விரக்தியில் ஜோலார்பேட்டையில் ஓடும் ரயிலில் பாய்ந்தார். இதனால் அவரது 2 கால்களும் நசுங்கிய நிலையில், அவரை திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
கால்கள் இல்லாமல் வெண்மதி வானில் தவழ்ந்து வரவில்லையா, இரு கைகள் இல்லாமல் நிலவினை அணைத்து காதல் தரவில்லையா என்பதெல்லாம் சினிமாவில் தான் நடக்கும். ஏற்கனவே திருமணத்துக்கு மறுத்த சதீஷ்குமார் இப்போது கால்கள் இல்லாத அஸ்வினியை எப்படி ஏற்றுக்கொள்வார் என்பது தான் வாழக்கையின் யதார்த்தம்.