திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பெரிய கம்மியம்பட்டு அண்ணா நகர் பகுதியில் சேர்ந்த கண்ணன் இவருக்கு நான்கு மகன்கள் மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளன. கண்ணனுடைய முதல் மகன் குமார் இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ள நிலையில் இந்த இரண்டு பெண் பிள்ளைகளும் ஜோலார்பேட்டை அருகே உள்ள தனியார் பள்ளியில் பயின்று வருகின்றன. நேற்று வழக்கம்போல பள்ளி முடிவடைந்து வீட்டிற்கு செல்ல இருந்த நிலையில் அவருடைய தாத்தா கண்ணன் இரண்டு பெண் பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது அண்ணா நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது அப்பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலர் அந்த பெண் பிள்ளைகளை ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இத்தனை நாள் ஆத்திரமடைந்த அவருடைய தாத்தா கண்ணன் அவர்களிடம் கேட்டுள்ளார் அதன்
பின்னர் இதுகுறித்து அவருடைய கடைசி மகனான சுரேஷ் என்பவரிடம் கூறியுள்ளார்.
பின்னர் சுரேஷ் அங்கிருந்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டபோது மது போதையில் இருந்ததாக கூறப்படும் வாலிபர்கள் திடீரென சுரேஷை சாரா மாறியாக தாக்கி உள்ளனர் இதனால் நிலைகுலைந்த சுரேஷ் அங்கேயே மயங்கி விழுந்தார்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் சுரேஷிற்கு 8 தையல்கள் போடப்பட்டன மேலும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் சுரேஷை தாக்கும் சிசிடிவி காட்சி அருகில் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவாகியுள்ளன அதன் காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பேத்தியை அழைத்து வர சென்ற நிலையில் பெண் பிள்ளைகளை ஆபாசமாக பேசி வம்பிழுத்த இளைஞர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக் குடும்பத்தின் கோரிக்கையாக உள்ளது.