Skip to content

April 2023

இன்றைய ராசிபலன்…. (22.04.2023)

மேஷம் இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவு மகிழ்ச்சியை தரும். ரிஷபம் இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். புதிய பொருட்கள் சேரும். கூட்டு தொழிலில் இருப்பவர்களுக்கு கூட்டாளிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு அமையும். மிதுனம் இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்புகள் ஏற்படும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு சிறப்பாக இருக்கும். பெற்றோர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். கடகம் இன்று இல்லத்தில் தாராள தன வரவும், லஷ்மி கடாட்சமும் உண்டாகும். உத்தியோகத்தில் ஒரு சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். சிம்மம் இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் எடுக்கும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் தொடர்பாக நவீன கருவிகள் வாங்கும் எண்ணம் எளிதில் நிறைவேறும். சுப காரியங்கள் கைகூடும். எதிர்பாராத வகையில் வருமானம் பெருகும். கன்னி இன்று உங்களுக்கு பொருளாதாரம் சற்று சுமாராக இருக்கும். அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் சற்று நிதானம் தேவை. சொந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. துலாம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் வேலைகளில் தடங்கல்கள் ஏற்படும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் நிதானமாக செயல்படுவது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. பணியில் கவனம் தேவை. விருச்சிகம் இன்று உங்களுக்கு பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் வகையில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். வேலையில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் உண்டாகும். பெண்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தனுசு இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். திடீர் என்று நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும். புதிய பொருட்களை வாங்குவீர்கள். இதுவரை வராத கடன்கள் வசூலாகும். மகரம் இன்று உங்களுக்கு உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில்  முன்னேற்றம் ஏற்படும். உடல் உபாதைகள் குறையும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். கும்பம் இன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகலாம். பொறுப்புடன் செயல்பட்டால் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மீனம் இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிடைக்கும். எதிரியாக இருந்தவர் கூட நண்பராக மாறி செயல்படுவார். தொழில் ரீதியாக வெளியூர் நபர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும்.

போலீசாரை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே லாலாபேட்டை பகுதியில் அகில இந்திய விவாகத் தொழிலாளர் சங்கத்தினர் மேட்டு மகாதானபுரத்தில் கடந்த மார்ச் 19ஆம் தேதி சம்பூர்ணம் பெண்ணை தாக்கிய சம்பந்தப்பட்ட பூபதி என்ற குற்றவாளி மீது… Read More »போலீசாரை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..

திருச்சி அருகே பாரம்பரிய மிக்க மீன்பிடித் திருவிழா…

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்கடாசலபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஏரியில் இன்று மீன் பிடித்திருவிழா நடைபெற்றது . கோடை காலத்தை முன்னிட்டு ஏரியில் உள்ள நீர் வற்றுவதனால் அங்கு… Read More »திருச்சி அருகே பாரம்பரிய மிக்க மீன்பிடித் திருவிழா…

ஆற்காடு வீராசாமிக்கு முதல்வர் பிறந்த நாள் வாழ்த்து…

  • by Authour

திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமிக்கு இன்று 86வது பிறந்த நாள். சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அவரை, முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்ததோடு, பிறந்த நாள் வாழ்த்தும் தெரிவித்தார்.… Read More »ஆற்காடு வீராசாமிக்கு முதல்வர் பிறந்த நாள் வாழ்த்து…

தஞ்சை அமமுக நிர்வாகிகள் அதிமுகவில் ஐக்கியம்…

  • by Authour

தஞ்சை தெற்கு மாவட்ட அமமுக செயலாளராகவும், ஒரத்தநாடு பேரூராட்சி தலைவராகவும் இருந்தவர் சேகர். இந்த கட்சிக்கு இருந்த ஒரே பேரூராட்சி தலைவரும் இவர் தான். இவரை கட்சியில் இருந்து நீக்கி கட்சியின் பொது செயலாளர்… Read More »தஞ்சை அமமுக நிர்வாகிகள் அதிமுகவில் ஐக்கியம்…

விசில் போடும் எக்ஸ்பிரசில் பயணம் செய்யும் வாய்ப்பு….. திருச்சியில் நேரடி போட்டி…

  • by Authour

கன்னியாகுமாரி.திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல் அல்லது திருச்சியை சேர்ந்தவரா நீங்கள்? சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் போட்டியை நேரடியாக காண ஏற்பாடு செய்யப்படும் விசில் போடு எஸ்பிரஸில் பயணிக்க வாய்ப்பு.. விசில் போடு எக்ஸ்பிரஸில்… Read More »விசில் போடும் எக்ஸ்பிரசில் பயணம் செய்யும் வாய்ப்பு….. திருச்சியில் நேரடி போட்டி…

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,575 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 5 ரூபாய் குறைந்து 5,570 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன்… Read More »திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

வாட்டி வதைக்கும் வெயில்… மயங்கி கிடந்த முதியவர்….. 3 காவலர்கள் உதவியுடன் மீட்பு….

  • by Authour

வெப்பமண்டலமாக மாறிவரும் கரூரில் கடந்த சில நாட்களாக 107 டிகிரிக்கு மேல் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த கடும் வெயிலில் கரூர் மாநகரப் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் அடையாளம் தெரியாத… Read More »வாட்டி வதைக்கும் வெயில்… மயங்கி கிடந்த முதியவர்….. 3 காவலர்கள் உதவியுடன் மீட்பு….

கரூர் மாவட்டத்திற்கு புதிய போலீஸ் ஸ்டேசன்… முதல்வருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் செந்தில்பாலாஜி…

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை தொகுதி, நங்கவரத்தில்  புதிய  தாலுகா காவல் நிலையம் அமைக்கப்படும் என்று இன்று சட்டமன்றத்தில்  முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.  இதையொட்டி கரூர்  மாவட்ட அமைச்சரும், கரூர் மாவட்ட திமுக செயலாளருமான   மின்துறை… Read More »கரூர் மாவட்டத்திற்கு புதிய போலீஸ் ஸ்டேசன்… முதல்வருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் செந்தில்பாலாஜி…

சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவு… கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை…

  • by Authour

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,  முன்னாள் முதலமைச்சர்கள் கலைஞர் கருணாநிதி  மற்றும் அறிஞர் அண்ணா நினைவிடங்களுக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார் .… Read More »சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவு… கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை…

error: Content is protected !!