மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா நாளை தமிழகம் வருகிறார். ஏற்கனவே தமிழகம் வர திட்டமிட்டு, பிறகு கடைசி நேரத்தில் அமித் ஷா வருகை ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், அமித் ஷா தமிழக வருகை உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம், வைரவன்பட்டி பகுதியில் உள்ள காலபைரவர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக அமித் ஷா தமிழகம் வருகிறார். மாலை 3:20 மணிக்கு தனி விமானம் மூலம் வாரணாசியில் இருந்து திருச்சி விமான நிலையம் வருகிறார். பின்னர் திருச்சியில் இருந்து ஹேலி பேட் மூலம் மதியம் 3.25 மணிக்கு புறப்பட்டு கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் மாலை 5:20 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடையும் அமித் ஷா மாலை 5:25 மணிக்கு தனி விமான மூலம் திருப்பதி செல்கிறார்.