Skip to content
Home » நாடாளுமன்ற தேர்தல்… 100% வாக்களிக்க விழிப்புணர்வு… மினி மாரத்தான் போட்டி.

நாடாளுமன்ற தேர்தல்… 100% வாக்களிக்க விழிப்புணர்வு… மினி மாரத்தான் போட்டி.

இந்திய தேர்தல் ஆணையம் ஃபீனிக்ஸ் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அறக்கட்டளை சார்பாக நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் 100% வாக்களிக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது..

அரியலூர் மாவட்டம் சிலால் கிராமம் நான்கு ரோட்டில் இந்திய தேர்தல் ஆணையம் ஃபீனிக்ஸ் பெண்கள், குழந்தைகள் நல அறக்கட்டளை சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும்100% வாக்களிக்கவும், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் ஃபீனிக்ஸ் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அறக்கட்டளை தலைவர் டாக்டர் பரமேஸ்வரி ஆனந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. சிலால் 4 ரோட்டில் தொடங்கிய மாரத்தான் ஓட்டத்தை உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா தொடங்கி வைத்தார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் 100%

வாக்களிக்க வேண்டியும், பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுப்போம், பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்போம், அனைத்து துறைகளிலும் பெண்கள் சிறந்து விளங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

சிலால் 4 ரோட்டில் ஆரம்பித்து அர்த்தனேரி பஸ் நிறுத்தம் அருகே சென்று மீண்டும் சிலால் நான்கு ரோட்டிற்கு வந்து முடிவடைந்தது. மூன்று கிலோமீட்டர் தொலைவில் நடைபெற்ற மினி மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டு வெற்றி பாராட்டி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது நிகழ்ச்சிக்கு வட்ட வழங்கல் அலுவலர் மீனா, நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் டாக்டர் ஆனந்தராஜ் செய்திருந்தார். இதில் மண்டல தலைவி சந்திரா, இந்துஜா, செயலாளர் மங்கையர்க்கரசி, துணைத் தலைவர் மோகன், சட்ட ஆலோசகர் ராஜ்குமார், சிலால் எதிர்நீச்சல் குழு பயிற்சியாளர் கண்ணன், ஆதி திராவிட தனி ஆய்வாளர் சத்தியா, மகளிர்கள் ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.சாலையில் இரு புறங்களிலும் 50-க்கும் மேற்பட்ட போலீசார்களும், அவர்களுக்கு உதவியாக மகளிர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வாக்காளர் விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மகளிர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். முடிவில் ஃபீனிக்ஸ் மண்டல செயலாளர் விஜி நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!