Skip to content

2024

இன்றைய ராசிபலன் -(16.03.2024)

சனிக்கிழமை..  மேஷம் இன்று குடும்பத்தில் உறவினர் வருகையால் வீண் பிரச்சினைகள் உண்டாகலாம். வேலையில் விரும்பிய இடமாற்றம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். ரிஷபம் இன்று குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வேலையில் உங்கள் திறமைகேற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி வரும். மிதுனம் இன்று உங்களுக்கு அக்கம் பக்கத்தினரால் பிரச்சினைகள் வரலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை தோன்றும். விட்டு கொடுத்து நடந்து கொண்டால் மன அமைதி உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். கடகம் இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலப்பலன் கிட்டும். சிம்மம் இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மதிப்பும் மரியாதையும் கூடும். தொழில் வளர்ச்சிக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வராத பழைய கடன்கள் வசூலாகும். கன்னி இன்று உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகமாகலாம். தொழிலில் மந்த நிலை ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். கடன்கள் சற்று குறையும். தெய்வ வழிபாடு நல்லது. துலாம் இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் கால தாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். பேச்சில் நிதானம் தேவை. விருச்சிகம் இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். புதிய பொருட்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சேமிப்பு உயரும். தனுசு இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் சுபசெலவுகள் ஏற்படும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை ஏற்படுத்தும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். உற்றார் உறவினர்களுடன் பகை விலகி நட்பு ஏற்படும். மகரம் இன்று உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். தேவையற்ற அலைச்சல் விரயங்கள் உண்டாகும். கூட்டாளிகளின் உதவியால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். கும்பம் இன்று உங்களுக்கு திடீர் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகள் வழியில் மனநிம்மதி குறையும். எந்த விஷயத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வேலையில் பணி சுமை குறையும். மீனம் இன்று உங்களது பலமும் வலிமையும் கூடும். கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். வேலையில் உங்கள் திறமைக்கேற்ற பலன் கிட்டும். வருமானம் பெருகும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

தவறவிட்ட செல்போனை ஒரு மணி நேரத்தில் மீட்டுக் கொடுத்த போலீசார்…

பெரம்பலூர் மாவட்டம்,மெயின்ரோடு, பெரியம்மாபாளையம், குன்னம் வட்டவசிப்பவர்  இளையராஜா த/பெ ராமர். இவர் இன்று 15.3.2024 மதியம் 3 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் தனது மனைவியுடன் பெரியம்மாபாளையத்திலிருந்து குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் போது தனது… Read More »தவறவிட்ட செல்போனை ஒரு மணி நேரத்தில் மீட்டுக் கொடுத்த போலீசார்…

நற்சிந்தனையுடன் மாணவர்கள் செயல்பட்டால் எதையும் சாதிக்கலாம்…திருச்சியில் செஃப் தாமு பேச்சு

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடியில் மாநில உணவக மேலாண்மை மற்றும் உணவாக தொழில்நுட்பவியல் நிறுவனம் உள்ளது. இங்கு உணவு தயாரிப்பு மற்றும் உணவக மேலாண்மை சார்ந்த இளங்கலை மற்றும் டிப்ளமோ படிப்புகள்… Read More »நற்சிந்தனையுடன் மாணவர்கள் செயல்பட்டால் எதையும் சாதிக்கலாம்…திருச்சியில் செஃப் தாமு பேச்சு

உறையூர் வெக்காளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா கோலாகலம்……

  • by Authour

திருச்சி உறையூரில் பிரசித்தி பெற்ற வெக்காளியம்மன் கோயில் உள்ளது. இங்கு அம்மன் வீற்றிருக்கும் மூலஸ்தானத்தில் மேற்கூரை கிடையாது. வானத்தையே கூரையாக கொண்டு காற்று, மழை, வெயில் என அனைத்து இயற்கை இடர்பாடுக ளையும் தன்னகத்தே… Read More »உறையூர் வெக்காளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா கோலாகலம்……

பங்குனி உத்திர திருவிழா…திருச்சி மலைக்கோட்டையில் கொடியேற்றம்….

  • by Authour

தென் கயிலாயம் எனப் போற்றப்படுகிறது திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில். இங்கு மேற்கு நோக்கி அமர்ந்திருக்கும் சிவனை மனம் உருகி வழிபட்டால் சுகப்பிரசவத்தில் குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம். இதன் காரணமாக சுக… Read More »பங்குனி உத்திர திருவிழா…திருச்சி மலைக்கோட்டையில் கொடியேற்றம்….

திருச்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு 100% ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு…

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் வருவாய் துறை சார்பில் பாராளுமன்றம் பொதுதேர்தல் 20024 முன்னிட்டு திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் 100% வாக்கு பதிவாக வேண்டும் என்ற நோக்கில் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சார்பில்… Read More »திருச்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு 100% ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு…

சந்திரசேகரராவின் மகள் கவிதாவை கைது செய்தது E.D

தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஐதராபாத்தில் உள்ள கவிதாவின் வீட்டில் அமலாக்கத்துறை மற்றும்… Read More »சந்திரசேகரராவின் மகள் கவிதாவை கைது செய்தது E.D

மதுரை மற்றும் திண்டுக்கல் சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு..

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை, திண்டுக்கல் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறது. மதுரை தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், தற்போதைய மதுரை நாடாளுமன்ற… Read More »மதுரை மற்றும் திண்டுக்கல் சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு..

நீலகிரியில் காட்டு யானை தாக்கி வாலிபர் பரிதாப பலி…

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஓவேலி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகள் வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இந்த வனப்பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகின்றது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும்… Read More »நீலகிரியில் காட்டு யானை தாக்கி வாலிபர் பரிதாப பலி…

செங்கல்பட்டில் விளையாட்டு வளாகத்திற்கு அமைச்சர் உதயநிதி அடிக்கல்….

  • by Authour

நமது மாநிலம் முழுவதும் விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை சர்வதேச தரத்தில் மேம்படுத்தி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்டத்திற்கு பல்வேறு வசதிகளுடன் ரூ.15 கோடி மதிப்பில் கட்டப்படவிருக்கும் விளையாட்டு வளாகத்திற்கு வீராங்கனைகளுடன்… Read More »செங்கல்பட்டில் விளையாட்டு வளாகத்திற்கு அமைச்சர் உதயநிதி அடிக்கல்….

error: Content is protected !!