Skip to content

ஆகஸ்ட் 17ல் மரங்கள் மாநாடு, அடுத்த திட்டம் குறித்து சீமான் பேட்டி

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும்,  சீமானும்  2018ம் ஆண்டு சென்னையில் இருந்து திருச்சிக்கு ஒரே விமானத்தில் வந்தார்கள். திருச்சி விமான நிலையதில் அவர்களை வரவேற்பதில் இரு கட்சி தொண்டர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.

இது தொடர்பான வழக்கு சீமான் மீதும் பதியப்பட்டது. இந்த வழக்கில் ஆஜர்ஆக  சீமான் இன்று திருச்சி கோர்ட்டுக்கு வந்தார்.  நீதிமன்ற  வளாகத்தில்அப்போது  சீமான் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் , அவர் கூறியதாவது;-

உங்களோடு ஸ்டாலின் திட்டம் மூலமாக
ஒரு அரசு தனது அரசு எந்திரத்தை தேர்தல் பரப்புரைக்கு,
கட்சி வேலைக்குபயன்படுத்துகிறது.
குடும்பத் தலைவிக்கு ஆயிரம் என்று தேர்தலுக்கு திமுக வாக்குறுதி அளித்தது. வென்று ஆட்சிக்கு வந்த பிறகு தகுதி வாய்ந்த பெண்களுக்கு என கூறினார்கள்.
இப்போது தேர்தலுக்கு ஆறு மாதம் இருக்கும் நிலையில்
விடுபட்டவர்களுக்கு உரிமைத்தொகை தருவோம் என்று சொல்கிறார்கள்.
ஓரணியில் தமிழ்நாடு என்பது இந்தி? எதிர்ப்புக்காகவா ?
இந்த திராவிட கட்சிகள் அனைத்துமே செய்தி அரசியல் மட்டுமே செய்கிறார்கள.
சேவை அரசியல் செய்யாது.
வீடு தேடி அரசு செல்வதாக சொல்கிறார்கள். ரோடு
தேடி மக்களும் ஆசிரியர்களும் போராடி வருகிறார்கள்.
3000 பணியிடத்திற்கு தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தில் 13 லட்சம் பேர் தேர்வு எழுதி உள்ளார்.
ஒரு அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி வாக்கு சேகரித்து வருகிறது.
50 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக பாஜகவை பார்த்து எதற்கு பயப்பட வேண்டும்.
என்னை தாண்டி தான் கோட்டையை எதிரிகள் தொட முடியும் என்று சொல்ல வேண்டியது தானே.
பிஜேபி வந்துடும் என்று சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா.

எந்த இடத்தில் பாஜகவுக்கு நீங்கள் மாறுபடுகிறீர்கள். ஆன்மீக ஆட்சி நடப்பதாக சேகர்பாபுவே சொல்கிறார். இல்லம் தேடி கல்வி எந்தக் கொள்கையில் உள்ளது. இதன் மூலம் பள்ளிக்கூடத்தை மூடுவீர்களா என்ற எனது கேள்விக்கு பதில் உள்ளதா? இல்லம் தேடி திட்டத்தில்
தாழ்த்தப்பட்ட குழந்தையின் வீட்டுக்கு வந்து உயர்ஜாதி வாத்தியார் வந்து பாடம் எடுப்பாரா.
பெரியார் பெயரில் தான் சமத்துவபுரம் இருக்கு. எங்க முன்னோர்கள் எல்லாம் சாதித் தீயை மூட்டி விட்டார்களா?
அங்கு எல்லா சமூக மக்களும் இணைந்து வாழ்கிறார்களா?
காங்கிரஸ் வலுவிழந்த போது அந்த ஆட்சியை தாங்கிப் பிடித்தது திமுக.
2006 ல் பாமக போன்ற கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி நடத்தினீர்கள். கூட்டணிக் கட்சிகளுக்கு
இரண்டு அமைச்சர்கள் கொடுத்தால் தான் என்ன?. மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பது முந்தைய நிலைப்பாடு.
இப்போது மத்தியில் கூட்டாட்சி . மாநிலத்தில் குடும்ப ஆட்சி. என்று மாறி உள்ளது.
உங்களோடு முதல்வர்
என பல திட்டங்களை கொண்டு வரும் திமுக
அரசின் முதல்வர் இதுவரை எங்கே இருந்தார். வருகிற ஆகஸ்ட் 17ம் தேதி மரங்கள் மாநாடு நடத்த இருக்கிறோம்.
மரங்களோடு பேசுவோம் மரங்களுக்காக பேசுவோம்.
தேர்தல் வரும்போது மட்டும் எப்படி திமுகவுக்கு திடீர் திடீரென்று காதல்வருகிறது.
இதற்கு ஏமாறுகிறதே ஜனம்.

ஆடும் மாடும் இல்லாமல் ஒரு நாடு எப்படி வளம்பெறும்.
உயர்திணை சரியாக வாழ வேண்டும் என்றால் அக்றிணை வாழ வேண்டும்.
தயிர்,  மோர்,  பாலாடை கட்டி எல்லாம் எங்கே இருந்து சாப்பிடுவீர்கள்.
கால்நடை துறைக்கு ஒரு அமைச்சகம் இருக்கிறதா இல்லையா?
ஆடும் மாடும் செல்வம் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.

error: Content is protected !!