Skip to content

2024

மயிலாடுதுறையில்….. நேற்றும் ஆட்டை கடித்து கொன்றது சிறுத்தை….. தேடுதல் வேட்டை தொடருது

  • by Authour

 மயிலாடுதுறை அருகே கூறைநாடு செம்மங்குளம் சாலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 11 மணியளவில் சிறுத்தை ஓடிய காட்சி சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்த தகவல் அறிந்ததும் கூறைநாடு போலீசார் மற்றும் மாவட்ட வன உயிரின காப்பாளர்… Read More »மயிலாடுதுறையில்….. நேற்றும் ஆட்டை கடித்து கொன்றது சிறுத்தை….. தேடுதல் வேட்டை தொடருது

இமாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்

இமாச்சல பிரதேசத்தில் இன்று அதிகாலை  மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தூங்கிகொண்டிருந்த மக்கள் பதறியடித்து சாலைகளுக்கு ஓடிவந்தனர். இது ரிக்டர் அளவில் 5.3 என பதிவானது. சேத விவரங்கள் உடனடியாக  கிடைக்கவில்லை.  

கச்சத்தீவை தர முடியாது….. இலங்கை அதிரடி அறிவிப்பு

தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாஜகவினர் கச்சத்தீவு பிரச்னையை கிளப்பினர். இதன் மூலம் தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு பின்னடைவு  ஏற்படும் என கருதினர். ஆனால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 10 ஆண்டுகளில் கச்சத்தீவை மீட்க … Read More »கச்சத்தீவை தர முடியாது….. இலங்கை அதிரடி அறிவிப்பு

இன்றைய ராசிபலன் –  05.04.2024

மேஷம் இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும், பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். ரிஷபம் இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளுக்கு கல்வி விஷயமாக மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். இதுவரை எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். மிதுனம் இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். சுப முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடு தோன்றும். எடுக்கும் புதிய முயற்சிகளில் தடைக்கு பின்பு நற்பலன் கிட்டும். வியாபாரத்தில் தேக்கங்கள் விலகி எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கடகம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனஉளைச்சல் அதிகமாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். பணியில் கவனம் தேவை. சிம்மம் இன்று நீங்கள் மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். சிலருக்கு கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். வருமானம் பெருகும். கன்னி இன்று உறவினர்கள் வழியில் சுப செலவுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கிடைக்கும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். துலாம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை உருவாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தடைப்படும். பணவரவு சுமாராக இருந்தாலும் உங்கள் தேவைகள் நிறைவேறும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும். நண்பர்களின் உதவி மகிழ்ச்சியை அளிக்கும். விருச்சிகம் இன்று நீங்கள் எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. வேலையில் உடனிருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். தனுசு இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். சகோதர, சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். பணிபுரிபவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும். வங்கி சேமிப்பு உயரும். மகரம் இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளால் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படலாம். வேலையில் உயர் அதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். கும்பம் இன்று உங்களுக்கு திடீர் தனவரவுகள் உண்டாகும். உறவினர்கள் வழியில் அனுகூலம் பெறுவீர்கள். சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சாதகப் பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடன் பிறந்தவர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். சுப செலவுகள் செய்ய நேரிடும். மீனம் இன்று நீங்கள் செய்யும் வேலையில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படும். வாகனங்களால் எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்கள் வழியில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிட்டும்.

பிரச்சாரத்தின் போது விஷேச வீட்டில் பந்தி பறிமாறி வாக்கு சேகரித்த நாகை பாஜக வேட்பாளர்…..

  • by Authour

நாகை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக எஸ்.ஜி.எம். ரமேஷ் போட்டியிடுகிறார். வாக்குப்பதிவுக்கு இன்னும் 16 நாட்களே உள்ள நிலையில் இன்று மீனவ கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். அக்கரைப்பேட்டை, கல்லார், வடக்கு பொய்கை… Read More »பிரச்சாரத்தின் போது விஷேச வீட்டில் பந்தி பறிமாறி வாக்கு சேகரித்த நாகை பாஜக வேட்பாளர்…..

சிறுத்தை நடமாட்டம்…. மயிலாடுதுறையில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை….

  • by Authour

மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை புலி நடமாடுவதையொட்டி பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பு காரணமாக மயூரா மெட்ரிக் பள்ளி, புனித அந்தோனியார் உயர்நிலைப்பள்ளி, டாக்டர் அம்பேத்கார் நகராட்சி தொடக்கப்பள்ளி, சின்ன ஏரகலீ நகராட்சி தொடக்கப்பள்ளி.… Read More »சிறுத்தை நடமாட்டம்…. மயிலாடுதுறையில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை….

என்னை விலைக்கு வாங்க பாஜகவிடம் வசதியில்லை… கலாய்த்த பிரகாஷ்ராஜ்!

  • by Authour

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் பாஜகவில் இணையப் போகிறார் என்ற பேச்சு எழுந்தது. அதற்கு இன்று விளக்கம் கொடுத்துள்ளார். குறிப்பாக ‘தி ஸ்கின் டாக்டர்’ என்ற ஐடி பிரகாஷ் ராஜ் இன்று… Read More »என்னை விலைக்கு வாங்க பாஜகவிடம் வசதியில்லை… கலாய்த்த பிரகாஷ்ராஜ்!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு 3 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு…

  • by Authour

தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் சை மாறுபடும் பகுதி நிலவுகிறது. 04.04.2024: தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.… Read More »தமிழகத்தில் 5 நாட்களுக்கு 3 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு…

திருச்சி காட்டூரில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஆட்டோ பிரசாரம் தொடக்கம்…

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ப.கருப்பையாவை ஆதரித்து திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் பல்வேறு வகையாக பிரச்சார யுத்திகள் நடைபெற்று வருகின்றன. அதன்… Read More »திருச்சி காட்டூரில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஆட்டோ பிரசாரம் தொடக்கம்…

கர்நாடகா……ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை……20 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு

  • by Authour

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் இண்டி தாலுகா லச்யானா கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி பூஜா. இந்த தம்பதிக்கு 2 வயதில் சாத்விக் என்ற ஆண் குழந்தை உள்ளது. சதீசின் தந்தை சங்கரப்பா… Read More »கர்நாடகா……ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை……20 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு

error: Content is protected !!